Friday, February 5, 2010

விண்ணைத்தாண்டி வருவாயா - ஓமன பெண்ணே

ஆஹா.. அடடா பெண்ணே உன் அழகில்
நான் கண்ணை சிமிட்டவும் மறந்தேன்
ஹேய் ஆனால் ஹேய்
கண்டேன் ஹேய் ஓர் ஆயிரம் கனவு
ஹேய் கரையும் என் ஆயிரம் இரவு
நீதான் வந்தாய் சென்றாய்
என் விழிகள் இரண்டை திருடிக்கொண்டாய்
ஒஹோ

ஓமன பெண்ணே ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமன
ஓஹோ ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமனே
ஓமன பெண்ணே உனை மறந்திட முடியாதே
ஓமன பெண்ணே உயிர் தருவது சரிதானே

நீ போகும் வழியில் நிழலாவேன் ஓஹோ
காற்றில் அசைகிறது உன் சேலை
விடிகிறது என் காலை
உன் பேச்சு உன் பார்வை
நகர்ந்திடும் பகலை இரவை ஓஹோ
பிரிந்தாலும் இணைந்தாலும்
உயிர்க்கூட்டின் சரிபாதி உனதே
உன் இன்பம் உன் துன்பம் எனதே
என் முதலோடு முடிவானாய்

ஓமன பெண்ணே ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமன
ஓஹோ ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமனே
ஓமன பெண்ணே உனை மறந்திட முடியாதே
ஓமன பெண்ணே உயிர் தருவது சரிதானே

மரகத தொட்டிலில் மலையாளிகள் தாலாட்டும் பெண்ணழகே
மாதங்க தோப்புகளில் பூங்குயில்கள் இணைச் சேரானு
புல்லாங்குழல் பூந்துகையான நின் அழகே
நின் அழகே

தள்ளிப்போனால் தேய் பிறை
ஆகாய வெண்ணிலாவே அங்கேயே நின்றிடாதே
நீ வேண்டும் அருகே
ஒரு பார்வை சிறு பார்வை
உதிர்த்தால் உதிர்த்தால்
பிழைப்பேன் பிழைப்பேன் பொடியன்

ஓமன பெண்ணே ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமன
ஓஹோ ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமனே
ஓமன பெண்ணே உனை மறந்திட முடியாதே
ஓமன பெண்ணே உயிர் தருவது சரிதானே

ஓமன பெண்ணே ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமன
ஓஹோ ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமனே
ஓமன பெண்ணே உனை மறந்திட முடியாதே
ஓமன பெண்ணே உயிர் தருவது சரிதானே

படம்: விண்ணைத்தாண்டி வருவாயா
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: பென்னி தயால், கல்யாணி மேனன்
வரிகள்: தாமரை

விண்ணைத்தாண்டி வருவாயா - மன்னிப்பாயா

கடலினில் மீனாக இருந்தவள் நான்
உனக்கென கரை தாண்டி வந்தவள் தான்
துடித்திருந்தேன் தரையினிலே
திரும்பிவிட்டேன் கடலிடமே

ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா
(ஒரு நாள்..)

கண்ணே தடுமாறி நடந்தேன்
நூலில் ஆடும் மழையாகி போனேன்
உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே
தொலை தூரத்தில் வெளிச்சம் நீ
உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே
மேலும் மேலும் உருகி உருகி
உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்
ஓஹோ உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்

ஓடும் நீரில் ஓர் அலைதான் நான்
உள்ளே உள்ள ஈரம் நீதான்
வரம் கிடைத்தும் தவர விட்டேன்
மன்னிப்பாயா அன்பே

காற்றிலே ஆடும் காகிதம் நான்
நீதான் என்னை கடிதம் ஆக்கினாய்
அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன்
என் கலங்கரை விளக்கமே
(ஒரு நாள்..)

அன்பிற்க்கும் உண்டோ அடைக்கும் தாழ்
அன்பிற்க்கும் உண்டோ அடைக்கும் தாழ்
ஆர்வளர்க்கும் கண்ணீர் பூசல்
அன்பிலார் எல்லாம் தமக்குரியர்
அன்புடையார் எல்லாம் உரியர் பிறர்க்கு
புலம்பல் என சென்றேன்
புலினேன் நெஞ்சம் கலத்தல் உருவது கண்டேன்

ஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீ
பூவாயா காணல் நீர் போலே தோன்றி
அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம்
எனக்கது தலையணை நனைத்திடும் நேரம்
(ஒரு நாள்..)
(கண்ணே..)

படம்: விண்ணைத்தாண்டி வருவாயா
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: AR ரஹ்மான், ஷ்ரேயா கோஷல்
வரிகள்: தாமரை

விண்ணைத்தாண்டி வருவாயா - விண்ணைத்தாண்டி வருவாயா

ஊனே உயிரே
உனக்காக துடித்தேன் விண்மீனே
விண்ணைத்தாண்டி வருவாயா
விண்ணைத்தாண்டி வருவாயா
விண்ணைத்தாண்டி வருவாயா
விண்மீனே வருவாயா

நேற்றும் இரவில்
உன்னோடு இருந்தேன்
அதை நீயும்
மறந்தாயா மறந்தாயா
கனவோடு விளையாட
விண்ணைத்தாண்டி வருவாயா
நிலவே நீ வருவாயா

ஊனே உயிரே
உனக்காக துடித்தேன் விண்மீனே
விண்ணைத்தாண்டி வருவாயா

உயிரே நீயும் நானும் பிரிந்தது
புவி ஈர்ப்பு மையத்தில்தானே
இரு துருவம் சேறும் அந்த ஓர் இடம்
அங்கே தான் நாம் சேர்ந்தோமே
இனிமேல் நானும் நீயும் பிரிவதில்லை
அன்பே..

விண்ணைத்தாண்டி வருவாயா
விண்ணைத்தாண்டி வருவாயா
விண்ணைத்தாண்டி வருவாயா
விண்மீனே வருவாயா

படம்: விண்ணைத்தாண்டி வருவாயா
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: கார்த்திக்
வரிகள்: தாமரை

விண்ணைத்தாண்டி வருவாயா - அன்பில் அவன்

அன்பில் அவன் சேர்த்த இதை
மனிதரே வெறுக்காதீர்கள்
வேண்டும் என இணைந்த இதை
வீணாக மிதிக்காதீர்கள்

உயிரே உன்னை உன்னை எந்தன்
வாழ்க்கை துணையாக
ஏற்க்கின்றேன் ஏற்க்கின்றேன்
இனிமேல் புயல் வெயில் மழை
பாலை சோலை இவை
ஒன்றாக கடப்போமே

உன்னை தாண்டி எதையும்
என்னால் யோசனை செய்ய
முடியாதே முடியாதே

நீ வானவில்லாக
அவள் வண்ணம் ஏழாக
அந்த வானம் வீடாக
மாறாதோ மாறாதோ
ஒரு ஜோடி போட்டுத்தான்
ஹேய் நீங்கள் போனாலே
கண் பட்டுக் காய்ச்சல்தான்
வாராதோ வாராதோ
(உயிரே..)

நீளும் இரவில் ஒரு பகலும்
நீண்ட பகலில் சிறு இரவும்
கண்டு கொள்ளும் கலை அறிந்தோம்
என்று ந்ங்கு அதை பயின்றோம்

பூம் வானம் காற்று
தீயை நீராய் மாற்று
புதிதாய் கொண்டு வந்து நீட்டு
(நீ வானவில்லாக..)
(உயிரே..)
(உன்னை..)
(நீ வானவில்லாக..)

காதல் எல்லாம் நுழையும் இடம்
கல்யாணம் தானே
இன்று தொடங்கும் இந்த காதல்
முடிவில்லா வானே

படம்: விண்ணைத்தாண்டி வருவாயா
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: தேவன், சின்மயி
வரிகள்: தாமரை

விண்ணைத்தாண்டி வருவாயா - கண்ணுக்குள் கண்ணை

கண்ணுக்குள் கண்ணை ஒற்றிக்கொண்டே
இல்லை இல்லை என்றாயே
கள்ளம் ஒன்றை உள்ளே வைத்து
பார்வை தந்து சென்றாயே
காதல் கொண்டு நான் பேச
கத்தி தூக்கி நீ வீச
பக்கம் வந்து தொட்டுப் பேசும்
கனவுகள் கண்டேன்
இன்னும் சற்றே அருகே வந்து
முத்தமும் தந்தேன்
இத்தனை நடந்தும் காதல் இல்லை
என்பது சரியா
ஆணாய் நானும் பெண்ணாய் நீயும்
இருப்பது பிழையா
உன் நண்பன் இல்லை
நானும் உன் வானின் நிலா
உன் நண்பன் இல்லை
நானும் உன் வானின் நிலா
உன் நண்பன் இல்லை
நீ என் உயிரின் விழா
(கண்ணுக்குள்..)

நீயும் நானும்
ஒரே புள்ளி ஒரே கோடு
நீயும் நானும் வாழப் போகும்
அந்த இடம் ஒரே வீடு
காதல் என்றால் காயம் தான்
அன்பே ஓடோடி
வந்து என் கண்ணை பார்த்து
காதல் தான் என்று
சொல்லி என் காயம் ஆற்று
(அன்பே..)
(கண்ணுக்குள்..)

படம்: விண்ணைத்தாண்டி வருவாயா
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: நரேஷ் ஐயர்

வரிகள்: தாமரை