கரிகாலன் காலப்போலக் கருத்திருக்குது கொழலு
கொழலில்ல கொழலில்ல தாஜ்ஜுமஹால் நிழலு
சேவலோடக் கொண்டைப்போல செவந்திருக்குது ஒதடு
ஒதடில்ல ஒதடில்ல மந்திரிச்சத் தகடு
ஏய் பருத்திப் பூவப்போல பதியிது ஒம்பாதம்
பாதமில்ல பாதமில்ல பச்சரிசி சாதம்
ஏ வலம்புரி சங்கப்போல வழுக்குது ஒங்கழுத்து
கழுத்தில்ல கழுத்தில்ல கண்ணதாசன் எழுத்து
(கரிகாலன்..)
ஏ வால வளைவுப்போல உள்ளதடி மூக்கு
மூக்கு இல்ல மூக்கு இல்ல முந்தரி முந்தரிக்கேக்கு
ஊதிவச்ச பலூன் போலப் பூத்திருக்கு கன்னம்
கன்னம் இல்ல கன்னம் இல்ல வெள்ளி வெள்ளிக் கிண்ணம்
மருதாணி கோலம் போட்டு மயக்குது தேகம்
தேகம் இல்ல தேகம் இல்ல தீப்புடிச்ச மேகம்
மாராப்புப் பந்தலிலே மறைச்சு வச்ச சோலை
சோலை இல்ல சோலை இல்ல ஜல்லிக்கட்டு காளை
(கரிகாலன்..)
கண்டவுடன் திட்டுதடி கத்திரிக்கோலுக் கண்ணு
கண்ணு இல்ல கண்ணு இல்ல கெரங்கடிக்கிற டின்னு
பத்த வச்ச மத்தாப்புப் போல மினு மினுக்குது பல்லு
பல்லு இல்ல பல்லு இல்ல பதிச்ச வைரக்கல்லு
சுருங்குப் பையப்போல் இருக்கு இடுப்பு
இடுப்பு இல்ல இடுப்பு இல்ல எந்திரப்படுப்பு
கண்ணுப்படப் போகுதுன்னு கன்னத்துல மச்சம்
மச்சம் இல்ல மச்சம் இல்ல நீ விட்டு வச்ச மிச்சம்
(கரிகாலன்..)
படம்: வேட்டைக்காரன்
இசை: விஜய் அந்தோணி
பாடியவர்கள்: சுர்சித், சங்கீதா ராஜசேகரன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment