Friday, February 5, 2010

ஈரம் - தரை இறங்கிய பறவைப் போலவே

தரை இறங்கிய பறவைப் போலவே
மனம் மெல்ல மெல்ல அசைந்து போகுதே
கரை ஒதுங்கிய நுரையைப் போலவே
என்னுயிர் தனியே ஒதுங்குகிறதே
தொடத்தொடத் தொடத் தொலைந்து போகிறேன்
எடை எடை மிகக் குறைந்து போகிறேன்
அட இது என்ன முடங்கிச் சேர்கிறேன்
நகக் கண் நுனியில் சிலிர்த்து விடக் கண்டேன்

அம்மையா அம்மையா நீயில்லாமல் நான் இல்லை
அம்மையா அம்மையா நீயில்லாமல் நான் இல்லை

நதியில் மிதக்கு ஓடம் என
வானில் அலையும் மேகம் என
மாறத்துடிக்கும் வேகம் கண்டேன்
இதுவும் புதிய உனர்வு அல்லவா
காதல் பேச்சில் பொய் பூசுவாய்
மயங்கும் வேளையின் மைப்பூசுவாய்
விலக நினைத்தால் கண் வீசுவாய்
தவித்தேன் தவித்தேன் கிடந்துத் தவித்தேன்
கிடந்துத் தவித்தேன்..

எது எது எனை வருடிப்போவது
எது எது எனைத் திருடிப்போவது
எது எது எனை முழுதும் சாய்ந்தது
நெறுப்பும் பனியும் நெருங்குகிறது
நிருதிரு வென விழித்துப்பார்க்கிறேன்
திசை அனைத்திலும் உன்னை காண்க்றேன்
நொடிக்கொருமுறைத் துடித்துப்போகிறேன்
எனதுப்பெயரும் மறந்து நடக்கின்றேன்
நடக்கின்றேன் நடக்கின்றேன் நடக்கின்றேன்

அம்மையா அம்மையா நீயில்லாமல் நான் இல்லை
அம்மையா அம்மையா நீயில்லாமல் நான் இல்லை

அருகில் இருந்தால் உன் வாசனை
தொலவில் இருந்தால் உன் யோசனை
எனக்குள் தினமும் உன் பாவனை
இனிமேல் எனது பயணம் சுகமே
இதமாய் உள்ள என் காதலே
முழுதாய் மாறுது என் வானிலை
இருவரில் யாரும் யாரோ இல்லை
கனவும் நினைவும் இணைந்து வருதே
வருதே வருதே..

படம்: ஈரம்
இசை: தமன்
பாடியவர்: சுசித்ரா

No comments:

Post a Comment