விடிகின்ற பொழுது தெரிந்திடுமா
கடலலை கரையை கடந்திடுமா
காதலை உலகம் அறிந்திடுமா
நினைப்பது எல்லாம் நடந்திடுமா
(விடிகின்ற..)
உன்னாலே எனக்குள் உருவான உலகம்
பூகம்பம் இன்றி சிதறுதடா
எங்கேயோ இருந்து நீ தீண்டும் நினைவே
எனை இன்னும் வாழ சொல்லுதடா
தொடுகின்ற தூரம் எதிரே நம் காதல்
தொட போகும் நேரம் மரணத்தின் வாசல்
காதலும் ஓர் ஆயுதமாய் மாறிடுச்சி
மெல்ல மெல்ல என்னை கொல்ல துணிஞ்சிடுச்சி
தீயில் என்னை நிக்க வச்சி சிரிக்கிறதே
தீர்ப்பு என்ன எந்தன் நெஞ்சு கேட்கிறதே
காட்டு தீ போல கண்மூடி தனமாய்
என் சோகம் சுடர் விட்டு எறியுதடா
மனசுக்குள் சுமந்த ஆசைகள் எல்லாம்
வாய் பொத்தி வாய் பொத்தி கதருதடா
யாரிடம் உந்தன்கதை பேச முடியும்
வார்த்தைகள் இருந்தும் மௌனத்தில் கரையும்
பச்சை நிலம் பாலை வனம் ஆனதடா
பூவனமும் போர்க்களமாய் மாறுதடா
காலம் கூட கண்கள் மூடி கொண்டதடா
உன்னை விட கல்லரையே பக்கமடா
(விடிகின்ற..)
படம்: ராம்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: மதுமிதா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment