Saturday, September 26, 2009

ஆதவன் - ஹசிலி ஃபிசிலி என் ரசமணி

அன்பே உன்னால் மனம் freezing
அடடா காதல் என்றும் amazing
Excuse me let me tell you something
நீ சிரித்தால் ஐபோன் ட்ரிங் ட்ரிங்
நீ வீசும் அம்பு என் மேல் பாய
காதல் வந்து என்னை ஆழ
வருவாயோ என்னை காப்பாற்ற
வந்தால் மடி சாய்வேன் வாழ

ஹசிலி ஃபிசிலி என் ரசமணி
உன் சிரிப்பினில் சிரித்திடும் கதக்களி
என் இளமையில் இளமையில் பனித்துளி
குதுகளி

எனக்கும் உனக்கும் ஏன் இடைவெளி
நீ இரவினில் இரவினில் எனை வாசி
என் பகலிலும் பகலிலும் நடுநிசி
புது ருசி

அஞ்சனா அஞ்சனா கொஞ்சினால் தேன் தானா
என் கனா என் கனா என்றுமே நீதானா
(ஹசிலி..)

உரசாமல் அலசாமல் உயிரோடு ஊருது ஆசை
அடங்காமல் இதுங்காமல் இருந்தால்தான் ஒய்ந்திடும் ஓசை
இரு விழியே ஏவுகணை உனக்கெதுவா இங்கு இணை
உன் இடையோ ஊசி முனை உடைந்திடுமோ சேரு என்னை

ஏன் என்னை தீண்டினாய் வெப்பமா
நான் உனக்கு பூக்களின் உப்புமா
விரலில் உள்ளதே நுட்பமா
நீ கொஞ்சம் தின்றாய் கொஞ்சி கொன்றாய்
(ஹசிலி..)

உயிரோடு உயிரோடு என்னை கொல்ல நெருங்குகிறாயே
விரலோடு விரல் சேர்த்து இதழுக்குள் இறங்குகிறாயே
யாரிதழில் யாரிதழோ வேர்த்துவிடும் வெங்குழலோ
உச்சி முதல் பாதம் வரை எத்தனையோ வித்தைகளோ

நீ ஆடை பாதியா பாதியா
நீ புலியும் மானும் கொண்ட ஜாதியா
உன் அழகின் மீதிதான் பூமியா
நீ முத்தப்பேயா மேதை நீயா
(ஹசிலி..)

படம்: ஆதவன்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: கார்த்திக், ஹரிணி, மாயா, Dr. பெர்ன்
வரிகள்: பா. விஜய்

No comments:

Post a Comment