முதல் முதலாக முதல் முதலாக
பரவசமாக பரவசமாக
வா வா வா அன்பே!
ஓ! ஓ! தனித் தனியாக தன்னந்தனியாக
இலவசமாக இவன் வசமாக
வா வா வா அன்பே!
உன்னாலே உன்னாலே விண்ணாளச் சென்றேனே!
உன் முன்னே உன் முன்னே மெய் தாழ நின்றேனே!
ஒரு சொட்டுக் கடலும் நீ! ஒரு பொட்டு வானம் நீ!
ஒரு புள்ளி புயலும் நீ! பிரம்மித்தேன்.
ஓ! ஓளி வீசும் இரவும் நீ! உயிர் கேட்கும் அமுதம் நீ!
இமை மூடும் விழியும் நீ! யாசித்தேன்.
முதல் முதலாக முதல் முதலாக
பரவசமாக பரவசமாக
வா வா வா அன்பே!
ஓ! ஓ! தனித் தனியாக தன்னந்தனியாக
இலவசமாக இவன் வசமாக
வா வா வா அன்பே!
முதல் முதலாக முதல் முதலாக
பரவசமாக பரவசமாக
வா வா வா அன்பே!
ஓ! ஓ! தனித் தனியாக தன்னந்தனியாக
இலவசமாக இவன் வசமாக
வா வா வா அன்பே!
ஒரு பார்வை நீளத்தை, ஒரு வார்த்தை நாணத்தை,
தாங்காமல் வீழ்ந்தேனே! தூங்காமல் வாழ்ந்தேனே!
நதி மீது சருகைப் போல் உன் பாதை வருகின்றேன்.
கரைத் தேற்றி விடுவாயோ? கதி மோட்சம் தருவாயோ?
மொத்தமாய் மொத்தமாய் நான் மாறிப் போனேனே!
சுத்தமாய் சுத்தமாய் தூள் தூளாய் ஆனேனே!
முதல் முதலாக முதல் முதலாக
பரவசமாக பரவசமாக
வா வா வா அன்பே!
ஓ! ஓ! தனித் தனியாக தன்னந்தனியாக
இலவசமாக இவன் வசமாக
வா வா வா அன்பே!
உன்னாலே உன்னாலே விண்ணாளச் சென்றேனே!
உன் முன்னே உன் முன்னே மெய் தாழ நின்றேனே!
நீ என்பது மழையாக, நான் என்பது வெயிலாக,
மழையோடு வெயில் சேரும், அந்த வானிலை சுகமாகும்.
சரி என்று தெரியாமல், தவறென்று புரியாமல்,
எதில் வந்து சேர்ந்தேன் நான், எதிர்பார்க்கவில்லை நான்.
என் வசம் என் வசம் இரண்டடுக்கு ஆகாயம்,
இரண்டிலும் போகுதே என் காதல் கார்மேகம்.
உன்னாலே உன்னாலே விண்ணாளச் சென்றேனே!
உன் முன்னே உன் முன்னே மெய் தாழ நின்றேனே!
ஒரு சொட்டுக் கடலும் நீ! ஒரு பொட்டு வானம் நீ!
ஒரு புள்ளி புயலும் நீ! பிரம்மித்தேன்.
ஓளி வீசும் இரவும் நீ! உயிர் கேட்கும் அமுதம் நீ!
இமை மூடும் விழியும் நீ! யாசித்தேன்.
படம்: உன்னாலே உன்னாலே
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: ஹரிணி, கார்த்திக், க்ரீஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment