காலம் கலிகாலம் ஆகிப்போச்சுடா
கம்பியூட்டர் கடவுளாக மாறிப்போச்சுடா
ஆமபளையே தெரியாமன கொழந்தை பொறக்குது
பொம்பளைங்க சேர்ந்து இங்க குடும்பம் நடக்குது
டப்பு மட்டும் வச்சிருந்தா போதும் நீங்க
தப்பு கிப்பு செஞ்சாலும் நியாயம்
பொய்யும் சத்தியம் செய்யும் இந்த பூபி எப்படி உய்யும்
இதப் பார்க்கப் பார்க்க மனுஷன் கொண்ட பக்தி கொறையுது
வினை தீர்க்க வந்த சாமி கூட ஆற்றில் கரையுது
மஹா கணபதி மஹா கணபதி
மஹா கணபதி மஹா கணபதி
கண்ணகிக்கு கோயில் கட்டும் கற்பு மிக்க நாடு இது
கற்புன்னா எத்தனை லிட்டர் புதுப்பொண்ணு கேட்குது
அட சேல பாவாட அது மலை ஏறிப்போச்சு
மிடியோடு சுடிதாறும் பொது உடையாகிப்போச்சு
போலி புன்னாக்கு பள்ளி எதுக்கு தந்தாலே பட்டம் இருக்கு
ஏட்டில் உள்ளது ஒழுக்கம் அது ரோட்டில் வந்தாலும் வழுக்கும்
இதப் பார்க்கப் பார்க்க மனுஷன் கொண்ட பக்தி கொறையுது
வினை தீர்க்க வந்த சாமி கூட ஆற்றில் கரையுது
மஹா கணபதி மஹா கணபதி
மஹா கணபதி மஹா கணபதி
அண்ணனுக்கு ஜே காதல் மன்னனுக்கு ஜே மரத் தமிழனுக்கு ஜே
நம்ம தலைவனுக்கு ஜே ஜே தலைவனுக்கு ஜே ஜே
தலைவனுக்கு ஜே ஜே
திரையில பொய்களை சொன்னா சாதிசனம் நம்புது
கருத்துல்ள கவிஞன் சொன்னா காத தூரம் ஓடுது
அட சத்துள்ள தானியம் அது காணாமப் போச்சு
வெறும் பொக்குள்ள அரிசி பொது உணவாகிப் போச்சு
பாசம் கண்ணீரு பழைய தொல்லை
தாயே செத்தாலும் அழுவதில்லை
அட ஏழுக்குண்டலவாட இது இன்னைக்குத் திருந்தும் நாடா
இதப் பார்க்கப் பார்க்க மனுஷன் கொண்ட பக்தி கொறையுது
வினை தீர்க்க வந்த சாமி கூட ஆற்றில் கரையுது
மஹா கணபதி மஹா கணபதி
மஹா கணபதி மஹா கணபதி
(காலம்..)
படம்: அமர்க்களம்
இசை: பரத்வாஜ்
பாடியவர்: ஸ்ரீநிவாஸ்
வரிகள்: வைரமுத்து
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment