மஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன்
கொஞ்சு பேசும் தட்டை பேச்சை கேட்டேன்
சேலை கட்டி போகும் மேகம் பார்த்தேன்
சோலை பூவில் மாலை ஒன்றாய் கேட்டேன்
மனதிலே மனதிலே புது அலைகள் அடித்தது
விழியிலே விழியிலே பொன் மீன்கள் துடித்தது
காதல் வருக வருக இவை நானம் ஒழிக ஒழிக
(மஞ்சள் பூசும்..)
கோலம் போட வாசல் உள்ளது
எந்தன் வீடோ வாசல் அற்றது
உந்தன் உள்ளம் கோயில் போன்றது
அதனால் தானே நான் தீபம் தந்தது
கண்கள் காணும் தூரத்தில்
வாழும் வாழ்க்கை போதும்
பாரம் கொண்ட மேகங்கள்
நீரால் மண்ணை தீண்டும்
உந்தன் காதல் ஒரு வழி
திரும்பி செல்ல தனி வழி
(மஞ்சள் பூசும்..)
தென்றல் வந்து ஜன்னல் திறந்தது
ஜன்னலின் வழியே காதல் உடைந்தது
ஓ காதல் நுழைய காற்று நின்றது
ஜன்னல் கதவை மூடி சென்றது
மூடும் கண்கள் எப்போதும் காற்றில் காண்பதில்லை
கனவில் தோன்றும் வண்ணங்கள் உண்மை ஆவதில்லை
திரும்ப வேண்டும் இண்வழி
சொல்லும் சொல்லின் நழ்வழி
(மஞ்சள் பூசும்..)
படம்: ஃபிரண்ட்ஸ்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: தேவன், சுஜாதா
வரிகள்: பழனி பாரதி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment