ஒரு நாள் இரவில் பகல் போல் இரவில்
பருவம் பதினாறை கண்டேனே
அடடா அருகில் அழகோ அழகில்
இதயம் மெழுகாகி நின்றேனே
கண்டேனே கடிக்கின்ற மானை
பெண்ணுக்குள் இருக்கின்ற மானை
பார்த்தாளேப் பயத்தோடும் சேனை
வெட்கத்தில் அடங்காத பெண்ணை
நெஞ்சத்தில் நெறுப்பேற்றும் கண்ணை
மொத்தத்தில் பறித்தாளே என்னை
(ஒரு நாள்..)
படப்படப்படபடப்பில் பார்த்தாளே பயமேற
தொடத்தொடத்தொடதொடப்பில் உள்நெஞ்சில் இரயில் ஓட
வாயாடிப் பெண்ணாக வந்தாயே
என் நெஞ்சைப் பந்தாடிச் சென்றாயே
(படபட..)
சின்னச்சின்னக் கண்ணாளே
சிக்க வச்சிப் போறாளே
சக்கரத்தைப் போலத்தான் சுத்த வச்சிப்போனாளே
முதல் அவளென முதல் முதல் அவளே என
முதல் முறைத் துளைத்தேனே
(ஒரு நாள்..)
வறேன் வறேன் வறேன் என்றாலும் மனதோடு வந்தாளே
சர சர சரவெடியாய் திரியேற்றிச் சென்றாளே
ஐயய்யோ ஐயய்யோ யாரோ நீ
என்னாளும் எனை ஆள வந்தாய் நீ
பஞ்சிருக்கும் பக்கத்தில் நெஞ்சிருக்கும் வெப்பத்தில்
காதல் என்னும் யுத்தத்தில் என்னை வென்றாள் மொத்தத்தில்
முதல் அவளென முதல் முதல் அவளே என
முதல் முறைத் தொலைத்தேனே
(ஒரு நாள்..)
படம்: கண்டேன் காதலை
இசை: வித்யாசாகர்
பாடியவர்: திப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment